Header Ads



முசலி பாடசாலை அதிபர்களுடனான ஹுனைஸ் பாரூக்கின் அபிவிருத்திச் சந்திப்பு

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப் பாடசாலை அதிபர்களின் ஒன்று கூடல் கோட்டக்கல்வி அதிகாரி அப்துஸ்ஸலாம் ஜுனைட் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தின் பிரதம அதீதியாக வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,சட்டத்தரணியும் முசலிப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹுனைஸ் பாரூக் அவர்கள், முசலிக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு கொள்வதாக ஒவ்வொரு அதிபரையும் தமது பாடசாலை தொடர்பான தேவைகளை முன்வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

கருத்துகளை முன்வைத்த அதிபர்கள் பாடசாலை எதிர்கொள்ளும் பௌதீக   வளப்பிரச்சினைகளையும் ,ஆளணிச் சீராக்கல் தொடர்பான பிரச்சினைகளையும் ,முன்வைத்ததைக் காணமுடிந்தது.அத்தோடு முசலிக் கோட்டக் கல்வி அலுவலகத்திற்குத் தனியான கட்டிடம் ஒன்றை நிர்மானித்துத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் தனது உரையின் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தின் கல்வியை உயர்த்த வேண்டிய பாரிய ஒரு பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.எவராலும் அழிக்க முடியாத ,திருடமுடியாத ,குறைவடையாத செல்வம் கல்வி மட்டுமே எமது பிரதேசத்தில் இருந்து பெரும் புத்திஜீவிகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில் ஆசிரியர் ஆளணி சீராக்கல் தெடர்பாக, வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுத் தருவேன் ,பௌதீக வளப்பிச்சினை ,கோட்டக் கல்வி காரியாலயக் கட்டிடப்பிரச்சினை போன்றவற்றை பன்முகப்படுத்தப்பட்ட எனது நிதி மூலமும், அமைச்சர் றிசாத் பதியுதீன் ,கல்வியமைச்சர் ,மீள்குடியேற்ற அமைச்சர் போன்றவர்களின்; உதவிகள் மூலமும் ,அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமும் விரைவில் பூர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார். 

பாடசாலைகளின் தேசியப் பரீட்சைகளான தரம் 05 புலமைப்பரீட்சை ,க.பொ.த.சாதாரண தர,க.பொ.த.உயர்தர பரீட்சைகளின் அடைவ மட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக இப்பிரதேசப் பாடசாலை நூலகங்களுக்கு தனது சொந்த நீதி மூலம் கடந்த வினாவிடை மாதிரி வினாவிடை ஏனைய நூல்கள் அடங்கிய புத்தகப் பொதிகள் வழங்க உள்ளதாகவும் உறுதியளித்தார் .

ஏதிர்வரும் 27.02.14 அன்று அரசசார்பற்ற நிறுவனங்களுடன் அதிபர்களையும் நேரடியாகக் கலந்துரையாடச் செய்யும் ஒரு ஒன்று கூடல் மறிச்சிக்கட்டிப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.