Header Ads



அமெரிக்காவை பலவீனப்படுத்த, ஜெனீவாவில் இலங்கை எதிர்த்தீர்மானம் கொண்டுவருகிறது

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், எதிர்தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பிக்க, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் தயாராகி வருவதாக,சிறிலங்கா அரசாங்க வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான, மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் கலந்தாலோசித்து வருகின்றன. 

சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்துலக விசாரணை நடத்த வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலேயே, இந்த எதிர்த் தீரமானத்தைக் கொண்டுவருவது குறித்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்தை, ரஷ்யாவும், சீனாவும் ஏற்கனவே நிராகரித்திருந்தன. 

இத்தகைய தீர்மானம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தன. 

மேலும், பாகிஸ்தான், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், கடந்த வாரம், சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் அனரோலி விக்ரோரோவ் கடந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும், இந்த எதிர்த்தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2 comments:

  1. Channel 4 அப்போது சில காட்சிகளை வெளியிட்ட வேளையில்,இலங்கையும் எங்கேயோ கிடந்த சில பலய காட்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து இலங்கை அரசும் ஒரு வீடியோவை தயார் செய்து ஒளிபரப்பியது.அப்படியா இதுவும் அடிக்கு பதிலடி?

    ReplyDelete
  2. A war crime is a war crime, must be investigated and the criminals be punished

    ReplyDelete

Powered by Blogger.