Header Ads



மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நடந்த கொடூரம்..! (படம் இணைப்பு)


மத்திய ஆப்பிரிக்க குடியரசில் போராளி என்று சந்தேகிக்கப்பட்ட நபரை ராணுவ வீரர்கள் குழு ஒன்று கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்று, எரித்த கொடுமை நடந்துள்ளது. 

தலைநகர் பாங்குயில் உள்ள பயிற்சி முகாமைச் சேர்ந்த ஒருவர் செலகா அமைப்பைச் சேர்ந்தவர் என்று ராணுவத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சீருடை அணிந்த சுமார் 20 வீரர்கள் அந்த நபரை தாக்கினர். இறந்த நபரின் உடலை ராணுவ வீரர்கள் தெருக்களில் இழுத்துச் சென்றனர்.

ராணுவ வீரர்கள் இறந்த நபரின் உடல் மீது ஏறி குதிப்பது, இழுத்துச் செல்வது என்று அட்டூழியம் செய்தது உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இறந்தவரின் உடலை ஒரு வீரர் இழுத்துச் செல்ல மற்றொரு வீரர் அந்த உடலின் மீது  பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார். அந்த உடலை படாதபாடு படுத்தி இறுதியில் எரித்துவிட்டனர். ராணுவ வீரர்களின் இந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.