அட்டாளைச்சேனையில் இறைச்சியினை விற்க பொலிஸாரால் தடை (படங்கள்)
(எம.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விற்பனைக்காக திறந்திருந்த மாட்டிறைச்சிக் கடையில் இன்று(27) இறைச்சியினை விற்க அக்கரைப்பற்று பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
மாடுகள் மற்றும் ஆடுகளின் வாய்,கால்களிலில் பரவி வருகின்ற கோமாரி நோயினைத் தொடர்ந்து இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் மாடு மற்றும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையினைத் தொடர்ந்தே அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்க பொலிஸார் தடை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் திறந்த வைக்கப்ட்டிருந்த மாட்டிறைச்சிக் கடையினை மூடுமாறும் அங்கிருந்த இறைச்சியினை கொண்டு செல்வதற்குமாக அக்கரைப்பற்று பொலிஸார் முற்பட்ட வேளை அங்கிருந்த பொதுமக்களும் கடை உரிமையாளரும் பொலிஸாரின் கோரிக்கைக்கு உடன்படவில்லை.
நாம் முறையான அனுமதியினை பிரதேச சபை மூலம் பெற்ற பின்னரே கடையினைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றோம். கடையினை மூட வேண்டுமாக இருந்தால் பிரதேச சபை எமக்கு அறிவிக்க வேண்டும் என கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பிரதேச சபைத் தவிசாளர் சம்பவ இடத்திற்கு வரும் வரை தீர்வினை எட்ட முடியாமல் இருந்த போது அங்கு வந்த பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு நிலைமையினை விளக்கினார். இதனைத் தொடர்ந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டதுடன், பிரதேச சபைக்கு இறைச்சிக் கடை மூடுவது பற்றி தகவல்கள் கிடைக்கும் வரை கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கைகள் தொடரலாம் என முடிவு கிடைத்தது. இதனைத் தொடர்ந்த அவ்வியாபார நிலையம் வழமைபோல் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment