Header Ads



சவூதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க அதிரடி திட்டம்

(Inne) சமீப காலமாக சவூதி அரேபியாவில் குடும்பங்களுக்குள் அதிகரித்து வரும் கைகலப்பு, வன்முறை, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்களும் குழந்தைகளும் துணிச்சலாக முன் வந்து புகார் கொடுப்பதை வலியுறுத்தவும், குடும்பத்தினும் நிகழும் வன்முறைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு நியாயம் கிடைக்கவும் கோரிக்கைகள் வலுத்த வண்ணம் இருந்தன.

இதனைத் தொடர்ந்து கிங் காலித் ஃபவுண்டேஷன் இத்தகைய விழிப்புணர்வு முகாம்களை ஆரம்பித்துள்ளது.

"இனியொரு வன்முறை வேண்டாமே!" என்ற கோஷத்துடன் இந்த விளம்பரங்கள் சவூதி அரேபியாவில் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான பிரத்தியேக இணைய தளம் http://www.kkf.org.sa/ar/Pages/nomoreabuse.aspx ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது:

அதில் "சவூதியில் குடும்பத்திற்குள் அடிதடி, வன்முறை, தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளோம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் கூட தைரியமாக முன் வந்து புகார்களைப் பதிவு செய்யலாம்!" என்று கூறப்பட்டுள்ளது.

கிங் காலித் ஃப்வுண்டேஷன் முயற்சி செய்து இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சட்ட வரைவை சவூதி அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதும் இதற்கு சவூதி வாழ் மக்கள் வரவேற்பு அளித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.