Header Ads



உலகிலேயே முதல் முறையாக விபச்சாரத்திற்கும் அருங்காட்சியகம்

உலகிலேயே முதல் முறையாக, நெதர்லாந்து நாட்டில், செக்ஸ் தொழிலாளிகள் குறித்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தில், 2000ம் ஆண்டில், விபச்சாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த, 7,000க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளர்கள், உள்ளனர். இதனால், ஆம்ஸ்டர்டாமின் ஒரு பகுதி, சிவப்பு விளக்கு பகுதியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால், இங்குள்ள பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து, செக்ஸ் தொழிலாளிகளின், இன்னல்களை விளக்கும் வகையில், 'விபசார அருங்காட்சியம்' ஆம்ஸ்டர்டாம் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அருங்காட்சியக நிர்வாகி கூறியதாவது: செக்ஸ் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பலரும், வறுமை காரணமாகவே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாளில், 11 முதல் 12 மணி நேரம் வரை இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவர்களின் மறுபக்கம் தெரியாத வாடிக்கையாளர்கள், இப்பெண்களை இயந்திரம் போல் பாவித்து, கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றனர். செக்ஸ் தொழிலாளிகளின், வாழ்க்கை பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே, இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. செக்ஸ் தொழிலாளர்களின், துன்பங்கள் திரையில் காட்டப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் பாலியல் தொழிலின் தொன்மையையும், அதன் வரலாற்றையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளன. இயற்கைக்கு மாறான வகையில், உடலுறவு கொள்வதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் அம்சங்களும், அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அருங்காட்சியகத்தை பார்வையிடுபவர்கள், செக்ஸ் தொழிலாளர்கள் மீதான தங்களின் பார்வையை, நிச்சயம் மாற்றிக் கொள்ளும் வகையிலான உருக்கமான அம்சங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Izu ponra sheyzihalai jaffnamuslim pirashurippazu perum aashariyamaha ullazu. Izai ariwazal manizanukku anna payan?

    ReplyDelete

Powered by Blogger.