Header Ads



சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் நேயப் பாடசாலை

(யு.எம்.இஸ்ஹாக்)

இலங்கையில் காணப்படுகின்ற பிள்ளை நேயப் பாடசாலையின் நடவடிக்கைகளை யுனிசெப் என்ற நிறுவனேமே முன்னெடுத்துச் செல்கின்றது என்பதை யாரும் அறிந்த விடயம்.

இந்த வகையில் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட  சிறுவர் நேயப் பாடசாலைகளின் சிறப்பான செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கான  சார்க் அங்கத்துவ நாடான  வங்காளதேஷ் அரசின்  கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும்  அதனோடு இணைந்த அதிகாரிகளும் 2014.02.13 ஆந் திகதி  பாடசாலைக் வருகை தந்தார்கள்.

மேற்படி பிரதிநிதிகள் கலாநிதி எஸ்.எல்.எம். றியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததுடன் அவரின் வழிகாட்டலின் ஊடாக எமது பாடசாலைக்கு சமூகமளித்தது இங்கு காணப்படுகின்ற பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்பாக அதன் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களிடம் கேட்டு விளங்கிக் கொண்டார்கள்.

இது போல் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடந்த ஆண்டுகளிலும் இப்பாடசாலையை தரிசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments

Powered by Blogger.