Header Ads



அழாமல் இருக்க, தனது மகனின் வாய்க்கு பூட்டுப் போட்டு கொன்ற தந்தை...!

அழாமல் இருக்க தனது மகனின் வாய்க்கு பூட்டுப் போட்டு அடித்து கொன்ற நைஜீரிய நாட்டு தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முப்பது வயதான கிரிஸ் எல்விஸ் என்ற தந்தை தனது நான்கு வயது மகனை தூரதிருஷ்டவசமான குழந்தை என்று கூறியே இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார். பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஆவணத்தில், எல்விஸ் தனது குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். 

சூடான இரும்பு கம்பி மூலம் உடலெங்கும் சூடு வைத்துள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றில் போட்டு குழந்தையை மூடியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு திரும்பிய தாய் தனது மகனின் கொடூர கொலை பற்றி பொலிஸாரிடம் புகார் கூறியதைய டுத்தே குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கைது செய்யப்படும் போது எல்விஸ் சித்த சுயாதீனமற்றவர் போன்று நடிக்க முயன்றபோதும் அவர் நல்ல நிலையிலேயே இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.