Header Ads



84 வயது மூதாட்டியின் கருப்பையில் 44 வயது சிசு

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 84 வயது பெண்ணின் வயிற்றில் 44 ஆண்டுகளாக கர்ப்பை சிசுவொன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயிற்றுவலி மற்றும் தலை சுற்றுக்காக மருத்துவமனைக்கு வந்த பெண்ணை சோதனையிட்டபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. வயது முதிர்ந்த பெண்ணை எக்ஸ்ரே செய்து பார்த்த போது கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக சோதனைக்காக போர்டோ நஸனல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த சிசுவுக்கு 20-28 வாரம் இருக்கலாம். கை-கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது. இதுபற்றி மருத்துவர் கூறுகையில்; இதுபோல சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உண்டாவதுண்டு. 

இந்த மூதாட்டியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுக்கு முன்பு உருவானது. அது இறந்து விட்டதால் அதை சுற்றிலும் கல்சியம் படிந்திருக்கிறது. பொதுவாக இதை 'ஸ்டோன் பேபி' என்று அழைப்பார்கள்' என்கிறார். சிசுவை அகற்ற மூதாட்டி மறுத்துவிட்டார். 

No comments

Powered by Blogger.