Header Ads



மாடாறுப்பை நிறுத்த ஜனாதிபதிக்கு, சிங்கள ராவய 7 நாள் காலக்கெடு (படங்கள்)

(JM.Hafeez)

ஜனாதிபதியே ஒரு வாரத்தில் மாடறுப்பை நிறுத்தாவிட்டால் இம்முறை மகஜர் கைளிப்பு, பேச்சு வார்த்தை எதுவும் இல்லை, உயிர் பலியே நடக்கும்  என சிங்கள ராவயின் தேசிய அமைப்பு இன்று 09-02-2014 கண்டியில் வைத்துத் தெரிவித்து தமது பாதயாத்திரையை மேற்கொண்டது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்னிருந்து கொழும்பை  நோக்கிச் சென்ற பாதயாத்திரையின் போது ஒலி பெருக்கி மூலம் இவ்வாறு தெரிவித்தனர்.

இவர்கள் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருடம் தலதா மானிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திரரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளதாகவும் அதில் 500 பேர் அடங்கியுள்ளதாகவும் முதலாவதாக மேற்படி இந்திரரத்ன தேரர் உயிர்த்தியாகம் செய்ததாகவும் இதுபோல் இன்னும் 499 பேர் இருப்பதாகவும் தெரிவித்தனர். இன்னும் ஒரு வாரகாலத்தினுள் மாடுறுப்பு திறுத்தப்படவேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர் தியாகங்களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.

இது விடயமாக எந்த ஒரு அடிப்படையிலும் தாம் பதில் அளிக்க தயார் என்றும் தெரிவித்தனர். இலங்கையில்  பிறமத தடை சட்ட மூலம் உடன் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையிலுள்ள முஸ்லீம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். மாடறுப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும்,  என்ற கோரிக்கைகளை முன் வைத்து இவ் ஊர்வலத்தை மேற்கொண்டனர். பாதயாத்திரை ஆரம்பிக்கப் படும் போது 17 பௌத்த மத குருக்களும் 6 சாம நேரு (பௌத்தமத குரு மாணவர்கள்) பொது மக்கள் சுமார் 100 பேர் அளவிலும் காணப்பட்டனர்.


 


3 comments:

  1. இந்த செய்தியை ஹசன் அலி பார்த்திருப்பார் என நம்புகின்றேன்.நாய் வாலை நிமித்த முடியாது.

    ReplyDelete
  2. அப்பிடிப்போடு போடு தன்னால

    ReplyDelete
  3. Srilankavil oru naalaikku pala latsam kolikalum pala aayiram pannikalum kolla padukinrathe.... Ithai ivarkalaal thadukka mudiyumaaa.... Mudiyaathu... Enenil avatrinaal laabam adaivathu .....!!!!

    ReplyDelete

Powered by Blogger.