Header Ads



காணாமற் போனவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் காலம் ஜனாதிபதியினால் 6 மாதங்களுக்கு நீடிப்பு

காணாமற் போனவர்களைப்பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாணையை சனாதிபதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமற் போனோர் தொடர்பாக விசாரனை செய்வதற்கு சனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பணிப்பாணையை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது 2014 ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை சனாதிபதி நீடித்துள்ளார்.

ஆணைக்குழு இற்றைவரை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 16,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதற் சுற்று விசாரணைகள் 2014 பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடைந்தது. அதன்போது 2014 சனவரி 18 முதல் 21 வரை கிளிநொச்சியிலும் இவ்விசாரணை நடந்தது.

திரு.மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம (தலைவர்), திருமதி பிரியந்தி சுரஞ்சனா வைத்தியரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகிய மூவர் இவ்வாணைக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவ்வாணைக்குழு 1990 ஜூன் 10ஆம் திகதி முதல் 2009 மே 19ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் காணாமற் போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தயாரித்தது.

காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.51வது (டுடுசுஊ) பரிந்துரைக்கு அமைவாக நடைபெற்றன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள தயவு செய்து றறற.டடசஉயஉவழைn.பழஎ.டம இணைய தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

No comments

Powered by Blogger.