Header Ads



இலங்கையில் வருடந்த விபத்துச் சம்பவங்களில் 600 மாணவர்கள் உயிரிழப்பு

(எம்.எம்.ஏ.ஸமட்)

ஒவ்வொரு ஒரு இலட்சம் மாணவர்களிலும் 16 வயதுக்குட்பட்ட 12 பாடசாலை மாணவர்கள் வருடந்தோரும் பல்வேறு விபத்துச் சம்பவங்களில் சிக்கி உயிர் இழக்கின்றனர். அத்துடன் நிகழும் ஏதுமொரு விபத்துச் சம்பவத்தில் அகப்பட்டு வருடாந்தம் 600 மாணவர்கள் உயிர் இழப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளார் குறிப்பிடுகிறார்.

அவரின் தகவலின் பிரகாரம, விபத்துக்களினால் உயிர் இழக்கும் மாணவர்களில் 250 பேர் மூச்சுத் திணரலினாலேயே இறப்பதாக அறியப்பட்டுள்ளது. 

விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு வருடமும் 2 இலட்சத்து 600 பாடசாலை மாணவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் 18 ஆயிரம் மாணவர்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகின்றனர். 2300 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களினாலேயே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதிவேகமாகச் செலுத்தப்படும் வாகனங்களில் மோதுண்டு 60க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வருடாந்தம் இறக்கின்றனர். 

இருப்பினும,; 90 வீதமான விபத்துக்கள் தடுக்கப்படக் கூடியதெனவும் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாகனம் செலுத்துவோரும் அக்கறை எடுக்க வேண்டுமெனவும் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் 15 ஆயிரம் நோயாளர்கள் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் அதிகளவிலானோர் வாய், நுரையீல் மற்றும் மார்பகப் புற்றுநோய்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனர். 

நுரையீரல் புற்று நோயின் அதிகரிப்புக்கு வழி மாசடைதலும் காரணமென அறியப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் புற்று நோய் வைத்திய நிபுணர்களைப் பணித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் 25 ஆயிரம் புற்று நோயாளர்கள் அரச வைத்தியசாலைகளின் புற்றுநோயப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கதிரியக்கச் சிகிச்சைக்காக 408 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் புற்று நோய்ச் சிகிக்சைக்காக இவ்வருடம் 950 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.