Header Ads



சிங்களவர்களை பாதுகாக்க விசேட திட்டம் - 5 பிள்ளைகளுடைய குடும்பத்திற்கு பிரான்ஸிலிருந்து நிதி


சிங்கள இனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை உடைய சிங்களக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

2013ம் ஆண்டின் பின்னர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட சிங்களக் குடும்பங்களுக்கு மதாந்தம் உதவு தொகையாக ஐயாயிரம் ரூபா வழங்கப்பட உள்ளது. இந்த தொகை தொடர்ச்சியாக பதினேழு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் பௌத்த விகாரையின் மஹாநாயக்கர் பரவாஹெர சந்திரரத்ன தேரர் இந்த நிதி உதவியை வழங்கி வருகின்றார். நாளுக்கு நாள் சிங்கள இனம் அழிவடைந் செல்வதனால் இவ்வாறான ஓர் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 14 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சிறிய குடும்பம் பொன்னானது என்ற கோட்பாட்டை சிங்களவர்கள் பின்பற்றி வருகின்றனர் என இளம் பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது துரதிஸ்டவசமானது. தேசத்தையும் இனத்தையும் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. எதிர்காலத்தில் முஸ்லிம் அல்லது தமிழர்கள் பெருபான்மையினத்தவர்களாக மாறக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். சிங்கள இனத்தை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு?எங்கயோ இருந்து கொடுக்கப்படும் வாக்கை நம்பி,வீனாக பிள்ளை குட்டிகளை அப்படி பெறாதீர்கள்,உங்களை பிள்ளை பெறவைத்து விட்டு,இருதியில் கையை விரிக்கப்போவதும் அவர்களே.

    சாதாரணமாக இரண்டு பிள்ளைகளை கொண்ட சிங்கள குடும்பங்களில் மேலதிகமாக மூண்று பிள்ளைகளை பெறப்போகிறார்கள் இந்த திட்டதின்படி,ஆனால் மூன்று பிள்ளைகளை பராமரிக்க மாதம் ஒன்றுக்கு 30,000 குறைந்தது இந்த காலத்தில் தேவை,அப்போ மீதி,25,000 ஐ யார் தருவார்?ஏமாந்து விடாதீர்கள் சிங்கள மக்களே!

    நீங்கள் தீனி போட்டு வளர்க்கும் எந்த திட்டமும்,இந்த திட்டமும் இருதியில் இஸ்லாத்திற்கே வந்துவிடும்,நீங்கள் அதிகரிக்க நினைக்கும் சனத்தொகை,இஸ்லாத்தின் சனத்தொகையை வளர்க்க எடுக்கும் நடவடிக்கையே என்பதை இருதி வரை இருந்தால் புறிவீர்கள்.

    ReplyDelete
  2. சும்மா காமடி பண்ணாதீங்க பா......!!!!

    ReplyDelete
  3. துறவியே கள்ளத்தனமாக சில துறவிகள் உறவுகள் வைத்திருப்பதை விட திருமண வாழ்க்கையை துறவிகள் ஏற்று நடந்தாலே போதும். இனம் அழியாது கள்ள உறவுகளுக்குத்தான் கருத்தடை தேவைப்படுகிறது

    ReplyDelete
  4. நல்லதொரு திட்டம். தொடருங்கள். ஐயாயிரத்தை ஐம்பதாயிரமாகக் கேட்டு ஆட்டம் ஆடும் ஒரு நாள் தோன்றும். அப்போது கண் விழிப்பவர்களைப் பார்க்கலாம். ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து மாத்திரம் போதுமா? தலை விரித்தாடும் போதை, விபச்சாரம் போன்ற பஞ்சமா பாதகங்களை விட்டும் தூரப்படுத்தும் நல்லொழுக்கமுள்ள சூழலை உருவாக்க உங்களிடம' என்ன திட்டம்? இன்று சிறு வயதிலேயே தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வீட்டையே சூறையாடும் எத்தனை வாலிபர்கள்?

    ReplyDelete
  5. நல்லதொரு திட்டம். தொடருங்கள். ஐயாயிரத்தை ஐம்பதாயிரமாகக் கேட்டு ஆட்டம் ஆடும் ஒரு நாள் தோன்றும். அப்போது கண் விழிப்பவர்களைப் பார்க்கலாம். ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து மாத்திரம் போதுமா? தலை விரித்தாடும் போதை, விபச்சாரம் போன்ற பஞ்சமா பாதகங்களை விட்டும் தூரப்படுத்தும் நல்லொழுக்கமுள்ள சூழலை உருவாக்க உங்களிடம' என்ன திட்டம்? இன்று சிறு வயதிலேயே தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வீட்டையே சூறையாடும் எத்தனை வாலிபர்கள்? எனவே உங்கள் சனத்தொகையை அதிகரிக்க ஐயாயிரம், பத்தாயிரம் என எவ்வளவு வழங்கினாலும் பரவாயில்லை. குழந்தைகளை நற்பிரஜைகளாக வாழும் வழியை அவர்களுக்கு ஊட்டுங்கள். புகைத்தல் உட்பட மது, போதை, ஓரினச் சேர்க்கை போன்ற தீய பழக்க வழக்ங்களின் விபரீதங்களை அவர்களுக்கு அதிகம் எடுத்துக் கூறுங்கள்.

    ReplyDelete
  6. முஸ்லிம்களே !அவனுகள் 5 பிள்ளைகள் பெற்றால் நீங்கள் 10 பிள்ளைகளை பெற்றெடுங்கள் மேலும் உங்கள் வீடுகளை சாதாரணமாக கட்டுங்கள் ! மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியை சிறுவயதில் புகற்றுங்கள் !

    ReplyDelete

Powered by Blogger.