Header Ads



மொஹமட் ஷியாம் படுகொலை - வழக்கை விசாரிக்க 3 நீதியரசர்கள் அடங்கிய விசேட குழு

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட உள்ளது.

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாஸ் குணவர்தன உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், இந்த நீதியரசர்கள் குழுவை நியமிக்க உள்ளார்.

இந்த குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர்களான லலித் ஜயசூரிய, நியோன் செனவிரட்ன, ரோஹினி வல்கம ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

No comments

Powered by Blogger.