Header Ads



மதீனா நகரில் ஈமானிய உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி - 30 பிலிப்பைன்ஸ் நாட்டினர் இஸ்லாத்தில் இணைந்தனர்


அண்மையில் மதீனா நகரில் ஈமானிய உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்ச்சி. மார்க்க அறிஞர்கள், மாணவர்கள், நகரப் பெரியவர்கள் குழுமியிருந்த அந்நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த 30 பேர் திருக்கலிமா மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

புனித மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலின் இமாம் ஷைகு அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்ஹுதைஃபீ, பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஷைகு முஹம்மத் அப்பாஸ் நதீம், மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலின் தொழுகை அறிவிப்பாளரும் (முஅத்தின்) மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் இயாத் ஷுக்ரீ முதலானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஷைகு முஹம்மத் அப்பாஸ் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையில், பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். அடுத்து வாழ்த்துரை வழங்கிய டாக்டர் இயாத் ஷுக்ரீ அவர்கள், ‘இக்லாஸ்’ (குல் ஹுவல்லாஹ்) அத்தியாயத்தின் விரிவுரை வழங்கினார்.

இறுதியாகப் பேசிய இமாம் ஷைகு ஹுதைஃபீ அவர்கள், இஸ்லாத்தின் மேன்மை, அதை ஏற்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தினார். பிறகு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் ஒவ்வொருவராக வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தனர். தொடர்ந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ளப்போவதாகவும் ‘உம்ரா’ வழிபாட்டை நிறைவேற்ற இருப்பதாகவும் புதிய சகோதரர்கள் அறிவித்தனர்.

IMRAN.. 

No comments

Powered by Blogger.