Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களை ஏமாற்றிய உகண்டா நாட்டினர் (படங்கள் இணைப்பு)


(farook sihan)

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த உகண்டாவின் பிரதம பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி தலைமையிலான குழுவினர் இன்று முஸ்லீம் மக்களை சந்திப்பதாக முன்னாயத்தங்கள் செய்யப்பட்ட போதும் அவர்கள் அங்கு செல்லாமல் வேறு இடங்களுக்கு சென்றமையினால் அம்மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர்.

இவர்களின் யாழ் விஜயத்தை முன்னிட்டு யாழ் முஸ்லீம்களை சந்தித்த இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர்  அங்குள்ள முஹம்மதியா ஜீம்மா பள்ளிவாசலை துப்பரவு செய்து உங்கள் பிரச்சினைகள் குறித்து வரும் பிரதிநிதிகளிடம் தெரிவியுங்கள் என கூறிச்சென்ற நிலையில் இன்று யாழ் வந்த மேற்படி பிரதிநிதிகள் யாழ் முஸ்லீம்களை சந்திக்காமல் நல்லூர் கோவில் ,யாழ் பொது நூலகம்,யாழ் கோட்டை பகுதிக்கு சென்றுவிட்டு தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த யாழ் முஸ்லீம்கள் தாங்கள் இவ்விடயத்தில் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

.இவர்கள் வரவை எதிர்பார்த்து பள்ளிவாசல் நிர்வாகம் கதிரை ஒழுங்குகள் மற்றும் இதர வேலைகளை முன்னெடுத்த நிலையில் எதுவித முன்னறிவிப்பும் இன்றி இவர்களின் வரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இதனால் யாழ் முஸ்லீம் மக்கள்  தாங்கள் இவ்விடயத்தில் ஏமாற்றப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இராணுவத்தினர் இவர்களது வருகையை ஒட்டி குறித்த பள்ளிவாசலின் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பள்ளிவாசலையும் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.