கல்முனையில் 'பொது மக்கள் புள்ளியிடல் அட்டை'
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தவுள்ள 'பொது மக்கள் புள்ளியிடல் அட்டை' கல்முனை மாநகர பிரதேசங்களின் எதிர்கால அபிவிருத்திக்கு கண்ணாடியாக அமையுமென கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்
இது தொடர்பாக கல்முனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அணுசரையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள இத்திட்டத்திற்கு செல்வாக்கு, இனம், அரசியல் என்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி கல்முனை மாநகரின் முன்னேற்றத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளோம் என்பதை மகிழச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கல்முனையின் மாநகரின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.
அந்தவகையில் ஆசிய மன்றம் கல்முனை மாநகரின் எதிர்கால அபிவிருத்திக்கு மிகுந்த உறுதுணையாக அமையும் வகையில் பொது மக்களின் நேரடியான கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பத்துடன் இத்திட்டத்ததைச் செயற்படுத்த முன்வந்திருப்பது கல்முனையின் அதிஷ்டமெனக் கருதுகிறேன்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கல்முனை மாநகரின் அபிவிருத்தியில் உச்ச நன்மையை அடைய முடியும் என நம்புகின்றேன்.
இருப்பினும,; இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய வேண்டுமாயின் அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களிடமிருந்து சரியாக தகவல்கள், கருத்துக்கள் பெறப்பட வேண்டும்
அதன் நிமித்தம் இத்திட்டம் தொடர்பிலும் இத்திட்டத்தின் வெற்றி தொடர்பிலும் பொது மக்கள் விழிப்புணர்வூட்டப்படுவது அவசியமென கல்முனை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டார்


Post a Comment