Header Ads



பெண் பொலிஸின் துணிச்சல் - வீட்டிற்குள் புகுந்து ஆணை பலாத்காரமாக கடத்தினார்

கடவத்தை பிரதேச வீடொன்றில் புகுந்து இளைஞரை கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண் காவற்துறை பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள், உதவி காவற்துறை அதிகாரியின் தலைமையில் இடம்பெறவுள்ளன.

கடவத்த பிரதேசத்தில் உள்ள தமது வீட்டிற்கு புகுந்த பெண் காவற்துறை பரிசோதகர், தமது பிள்ளையை தாக்கி கணவனை கடத்திச் சென்றுள்ளதாக பேலியகொட காவற்துறையில் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பேலியகொட காவற்துறையினர், சம்பவம் தொடர்பான பெண் காவற்துறை பரிசோதகர் மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஆணுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக sfm செய்தி பிரிவு காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹனவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், பெண் காவற்துறை பரிசோதகரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லையென குறிப்பிட்டார்.

எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.