Header Ads



அம்பாரை மாவட்ட மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த ஐக்கிய மீலாத் விழா

(எம்.எம்.ஜபீர்)

அம்பாரை மாவட்டத்தின் மத்தியமுகாம் நகரிலுள்ள மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த ஐக்கிய மீலாத் விழா இன்று 29-01-2014  மத்தியமுகாம் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களம் ஆகிய மூவின மக்களின் ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் மத்தியமுகாம் பிரதேச மக்களினதும், மதகுருமார்களினதும், இளைஞர் யுவதிகளினதும், பாடசாலை மாணவர்களினதும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஐக்கிய மீலாத் விழாவில் கலை, கலாசார போட்டி நிகழ்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மத்தியமுகாம் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ரி.எம்.எம்.அமீனுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாவிதன்வெளி அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் உட்பட மதகுருமார்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள் பிரதேச பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.