Header Ads



காத்தான்குடி நகர சபையை கண்டிக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களால் காத்தான்குடி நகர சபை அமர்வில் முன்வைக்கப்ட்ட பிரேரணை ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது நகர சபை ஆளுந்தரப்பினரின் சமுக அக்கறையற்ற போக்கினையே பிரதி பலிக்கின்றது. இது சமுக நலன் குறித்து சிந்திக்கும் அத்தனைபேருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் தரும் செயலாக அமைந்திருக்கின்றது. கடந்த 28.01.2014 ந் திகதியன்று காத்தான்குடி நகர சபை மாதாந்த அமர்வின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளான யுடுஆ. ஸபீல் மற்றும் ஆர்யு. நசீர் ஆகியோரால் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாப குறித்த பிரேரனை முன்வைக்கப்பட்டது.

    கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவைகளைத் தோண்டுதல்.
    கடத்தப்பட்டு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எச்சங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச்சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
    அவ்வாறு கடத்திக் கொல்லப்பட்டோர் மற்றும் கானாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடுகளை வழங்குதல்.
    மேற்படி கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோரினை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டடு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இச்; சூழ்நிலையில் நிரந்தர சமாதானத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவது தேசத்தை நேசிக்கும் அனைவரினதும் தலையாய நோக்கமாக இருக்கிறது. அந்தவகையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை கண்டறிந்து அவர்களுக்கான நீதியையும் நிவாரனத்தினையும் பெற்றுக் கொடுப்பதன் மூலமாகவே இனங்களுக்கிடையிலான நிரந்தர நல்லினக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதோடு அதன் மூலமாகவே நிரந்தர சமாதானம் கொண்ட ஒரு தேசத்தை உருவாக்க முடியும் என நாம் நம்புகின்றோம். இதன் பின்னணியிலேயே அரசாங்கம் கூட பயங்கரவாத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளைக் கண்டறிவதற்கான மதிப்பீடுகளையும், குறிப்பாக, காணாமல் போனவர்களின் விபரங்களையும் திரட்டுகின்ற பணியையும் தேசிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவினை அரசாங்கம் நியமித்திருக்கிறது. முஸ்லிம் சமூகம் சார்பில் காணாமல் போனோர் பற்றிய தகவல்களை பல்வேறு தரப்பினர்களும் பல்வேறு பிரதேசங்களில் இருந்து இவ்வாணைக் குழுவிற்கு வழங்கியிருக்கிறார்கள்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் இருந்தும் காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், காணாமல் போனோர் பற்றிய விபரங்களை திரட்டி அறிக்கைகளை வெளியிடுவதனால் மாத்திரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதும் நீதியோ அல்லது நிவாரனங்களோ அல்லது வேறேதும் உதவிகளோ கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

எனவேதான் தகவல்களைத் திரட்டி அறிக்கைகளை மாத்திரம் வெளியிடுவதோடு நின்றுவிடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரனம் கிடைக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள்களையும் பரிந்துரைகளையும் நமது மக்கள் சார்பாக விடுக்க வேண்டுமென எமது இயக்கம் தீர்மானித்தது.

அவ்வாறு முன்வைக்கப்படும் வேண்டுகோளானது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த வேண்டுகோள் அல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சகல தரப்பு பிரதிநிதிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பிரேரணiயாக அமையும்போதுதான் அது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் உரிய கவனத்தையும் அங்கீகாரத்தினையும் பெறும். ஏனைய சமூகங்கள் சார்பில் அந்த சமூகங்களின் பிரதிநிதிகளான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற கோரிக்கைகளை தமது மக்கள் சார்பாக முன்வைத்திருப்பதை நாம் அறிவோம் . அதுவே, அம்மக்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை உரிய முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.

இருப்பினும், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொhடர்பில் அதன் சார்பாக பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் மௌனமாகவே இருக்கின்றனர். இன்னும் சிலர் சில கண்துடைப்பு அறிக்கைகளோடு மாத்திரம் நிறுத்திக் கொள்கின்றனர். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளையும் அதற்கான அழுத்தங்களையும் கொடுப்பதற்கு எவரும் நேர்மையான அக்கறையோடு முன்வருவதாக இல்லை. எனவேதான் கானாமல்போனோர் விடயம் தொடர்பில் வெறும் அறிக்கைகளோடு மாத்திரம் நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முதற்படியாக மேற்சொன்ன பிரேரனைகள் நகரசபை பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

சகல தரப்பு நகர சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் இப்பிரதேச மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒப்புதலுடனும் ஒரு வலுவான மக்கள் கோரிக்கையாக இதனை தேசிய மட்டத்தில் முன்வைப்பதுவே எமது நோக்கமாகும்.
இருப்பினும் காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இதனை எவ்வித நியாயங்களுமின்றி நிராகரித்ததன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் முதலாவது முட்டுக் கட்டையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது பெரும் கவலைக் குரிய விடயமாகும். இப்பிரேரனை தொடர்பான திருத்தங்கள் ஏதும் அவசியப்படின் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக எமது பிரதிநிதிகள் தெரிவித்து ஆதரவினைக் கோரிய போதும் கூட நகர சபை தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலரும் இதனை காரணமின்றி நிராகரித்திருக்கின்றனர். இருப்பினும் ஆளுந்தரப்பு நகர சபை உறுப்பினரான முஹம்மது சியாத், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இப்பிரேரனைக்கு ஆதரவளிக்க தயாராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை வலியுறுத்தக் கோரும் இதுபோன்ற பிரேரனைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் முன்வைத்த சந்தர்ப்பங்களில் கூட பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காத்தான்குடி நகர சபை அவற்றை நிராகரித்திருக்கிறது. உதாரனமாக, தம்புள்ள கைரிய்யா பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அதனை கண்டிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பிரேரனையையும் காத்தான்குடி நகர சபை நிராகரிதிருந்தது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அம்மக்களின் நலன்களுக்கு விரோதமான செயற்படுகின்ற இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பில் எமது இயக்கம் கவலையடைவதுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாத இது போன்ற கையாலாகாத்தனமான செயற்பாடுகளை பொருட்படுத்தாது எமது இயக்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எமது மக்கள் சார்பாக மேற்கொள்ளவிருக்கிறது. அந்த வகையில், காணாமல் போன மக்களுக்கு உரிய நிவாரனங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை குறித்த ஆணைக்குழுவிற்கு முன் உத்தியோகபூர்வமாக சமர்பிக்க எமது இயக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments

Powered by Blogger.