மோடி பிரதமர் ஆவதை தடுக்க முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் முஸ்லிம்கள் மற்றும் ஜாட் பிரிவினரிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையானது சில மாவட்டங்களில் கலவரமாக வெடித்தது. இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை அரசியல் கட்சிகளின் தூண்டுதல்பேரில் நடந்தது என்று சமாஜ்வாடியும், பாரதிய ஜனதாவும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டின. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த மத நிகழ்ச்சியில் மந்திரி அசம் கான் கலந்துகொண்டார். அப்போது மோடி குறித்து அவர் கூறியதாவது:-
முஸ்லிம்களை பிரிப்பதற்கான மிகப்பெரிய சதித்திட்டம் இங்கு தீட்டப்படுகிறது. நீங்கள் பிரிக்கப்பட்டால், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவார். எனவே அவர் பிரதமர் ஆவதை தடுக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். கொலையாளி மோடி ஒருபோதும் பிரதமராக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment