போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் பற்றிய சுகாதரா அமைச்சின் அறிவித்தல்
(எம்.எம்.ஏ.ஸமட்)
உள்ளுர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரத்தை உறுதி செய்வதற்கான சோதனை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீரை தயாரித்து விற்பனை செய்யும் ஏறக்குறைய நூறு கம்பனிகள் தற்போது நாட்டில் உள்ளன. அத்துடன் அதிகளவிலான கம்பனி உரிமையாளர்கள் போத்தலில் குடி நீரை அடைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், தற்போது அனுமதி வழங்குவதை சுகாதார அமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
முன்னெடுக்கப்படவுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதியின்றி குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படும் கம்பனிகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றுடன் குடி நீரின் தரம், அதன் ஆரோக்கியத் தன்மை என்பவை தொடர்பிலும் சோதனை மேற்கொள்ளபடவுள்ளன.
தரமற்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சந்தைகளில் விற்பனை செய்யப்டும் குடிநீர் போத்தல் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டிருப்பதுடன், அதன் தலைப்பகுதியில் உற்பத்தி நிறுவனத்தின் பெயர், சேர்க்கப்பட்டுள்ள கூறுகள், போத்தலில் அடைக்கப்பட்ட திகதி, பாவனைக் காலம், தொகுதி இலக்கம் போன்ற விபரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருத்தல் அவசியமெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுவதாக பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
.jpg)
Post a Comment