Header Ads



ஹரீஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு


(யு.எம்.இஸ்ஹாக்)

பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்  குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் “திதுலன” ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும்  நிகழ்வு இன்று 26.12.2013 சாய்த்தமருது மாவட்ட வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில்  நடை பெற்றது .


இவ்வைபவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெவ்வை, சாய்ந்தமருது பிரதேச  செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்,  கலந்து சிறப்பித்தனர் .

10 இலட்சம் ரூபா பெறுமதியான சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்கள் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப்  இடம் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ்  வழங்கி வைத்தார் .


No comments

Powered by Blogger.