வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது
வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 2014ம் ஆண்டுக்கான வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம், 19,481 மில்லியன் ரூபா நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை மாகாணசபையின் கீழ் உள்ள ஆளணியினருக்கான ஊதியம் மற்றும் ஏனைய செலவுகளுக்கும், மாகாண அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள திணைக்களங்களின் செலவுகளுக்கும், ஏனைய வேலைத்திட்டங்களுக்கும் ஒதுக்குவது குறித்த விபரங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
.jpg)
Post a Comment