மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை தயாரிக்க புதிய இணக்கப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை தயாரிப்பது தொடர்பில் புதிய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பணியாற்றுவதற்காக பணியாளர்களை அனுப்பும் 6 ஆசிய நாடுகள் மற்றும் 6 மத்திய கிழக்கு ராச்சியங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உலக தொழில் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மகளீர் விவகார காரியாலயம் மற்றும் சர்வதேச குடிவரவு அமைப்பு ஆகியனவும் பங்கேற்றிருந்தன.
குறிப்பாக மத்திய கிழக்கு வீட்டுப்பணிகளுக்காக செல்லும் பணியாளர்களின் சேவை நிலைமைகள் மற்றும் கடைபிடிக்கப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச தொழில் சட்டங்களுக்கு அமைவாக குறித்த நாடுகளின் தொழிலாளர் கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, நீண்டகால ஒப்பந்தங்களை புரிந்துகொள்ளக் கூடிய மொழிகளில் பெற்றுக்கொடுக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment