கல்முனை முஸ்லிம் உறவுகளே கொஞ்சம் கண் திறவுங்கள்..! (படம் இணைப்பு)
(யு.எம் .இஸ்ஹாக்)
இலவசமாக சுகாதார சேவை கிடைக்கும் எமது நாட்டில் சிறியதொரு சத்திர சிகிச்சைக்கு பள்ளிவாசல்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒரு தாயை கல்முனை பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலை சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் ஆளாக்கியுள்ள அவல நிலைக்கு பொறுப்பு கூறுபவர்கள் யார் ?
அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு குடல் இறக்க நோய் (Hernia ) ஏற்பட்டுள்ளது . இந்த நோயாளி கல்முனையில் உள்ள வைத்திய சாலை ஒன்றின் சத்திர சிகிச்சை நிபுணரை நாடி உள்ளார் அந்த வைத்திய நிபுணரோ சாதாரணமாக செய்யக் கூடிய இந்த குடல் இறக்க சத்திர சிகிச்சையை வைத்திய சாலையில் செய்ய முடியாது என்றும் இதனை தனியார் வைத்திய சாலையில்தான் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து கல்முனையில் உள்ள தனியார் வைத்திய சாலைக்கு வர சொல்லி இருக்கிறார் .
அங்கு சென்ற நோயாளியான அந்த தாயிடம் இந்த சத்திர சிகிச்சையை செய்வதென்றால் ரூபா 65000 செலவாகும் என அந்த வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார் . இதனை கேட்ட அந்த தாய் என்னிடம் ரூபா 40000 உள்ளது மீதி பணத்தை எனது உறவினர்களிடம் சென்று பெற்று வருகின்றேன் எனக்கு சத்திர சிகிச்சை செய் ய கடிதம் ஒன்று தருமாறு கோரியுள்ளார். வைத்தியரோ குறித்த தனியார் வைத்திய சாலையின் நோய் நிருணய அட்டையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக ஒப்பமிட்டு நோய் நிருணய அட்டையை வழங்கியுள்ளார் . ஆனால் சத்திர சிகிச்சை செய்யப் படவில்லை .
சத்திர சிகிச்சை செய்வதற்கு மீதி பணமான ரூபா 25000 பெற்றுக்கொள்ள அந்த தாய் பள்ளிவாசல்களில் பிச்சை எடுக்கு நிலைக்கு வந்துள்ளார். அண்மையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்பாக வெள்ளிக்கிழமை தினம் பிச்சை எடுப்பதற்கு நோய் நிருணய அட்டையை பொதுமக்களுக்கு காண்பித்த போதே அருகில் நின்ற வைத்தியர் ஒருவர் இதனை அவதானித்து அருகில் நின்ற ஊர் பெரியார்களிடம் கூறியுள்ளார் . ஊரவர்கள் இந்த அட்டையை பார்த்த போதே இந்த உண்மை நிலை தெரிய வந்துள்ளது. கல்முனை பிரபல வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவரின் இலட்சினையும் ஒப்பமும் தனியார் வைத்திய சாலை நோய் நிருணய அட்டையில் பொறிக்கப் பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
கண்ணியமான சேவையை செய்யும் கனவான் வைத்தியர்களும் புனித சேவை புரியும் தனியார் வைத்திய சாலைகளும் பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படுவது நியாயமானதா ?

இவ்வளவையும் பிரசுரித்த நீங்கள் ,தயவு செய்து அந்த அட்டையையும் பிரசுரியுங்களேன்
ReplyDeleteI don't believe a medical surgeon would do such a foolish act, but it looks like a political agenda behind this incidence. However, further investigation is required to confirm this.
ReplyDeleteplease tell the doctor name here..otherwise please do not publish the news
ReplyDeleteஅந்த டாக்குத்தரின் பெயரை பகிரங்க படுத்துங்கள்..... அப்போதான் மக்கள் நேரடியாக அவரின் வீட்டுக்குச்சென்று கல்லால் அடிக்க முடியும்......
ReplyDeleteஇன்னும் எத்தனை டாக்குத்தர்கள் வேலை நேரத்தில் வீட்டில் கிளினிக் நடத்துகின்றார்கள் என்று தெரியுமா?
Okay found the solution for the mom.
ReplyDeleteplease you can go to immediately sammanthurai anver ismail hospital meet Dr. sameem surgeon he can do immediately some advice or surgery.
ReplyDeleteசரி இது தொடராமல் இருக்கவும் முக்கியமாக இந்த வைத்தியருக்குரிய தக்க முறைப்பாடுகளையும் செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவும். மேல் இடங்களுக்கு தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்கவும். முடியுமானால் அந்த வைத்தியரிடம் மீண்டும் அப்பெண்ணை அனுப்பி உரையாடலை. ஒலிப்பதிவு செய்த்து. ஊர்ஜிதப்படுத்தி, அதன் பிரதியொன்றையும். மேலதிகாரிகளுக்கு அனுப்பு வைக்க தயவு செய்து யாரவது முன் வாரவும்.
ReplyDeleteஅந்த டாக்குத்தர் காங்கிரஸ் காரராம் -அதனாலே இந்த முறைப்பாடுகள் எல்லாம் செய்தாலும் பலிக்காதாம்
ReplyDelete