கொழும்பில் இன்று அரை நிர்வாண போராட்டம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 02-12-2013 கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. விவசாயிகள் தமது தொழில் சம்பிரதாய அரை நிர்வாண ஆடையில் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும் முட்டாள்கள் உள்ளார்கள் என்பதை சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பம் தான். ஒவ்வொரு நாளும் அரை நிர்வாணத்தில் இருக்கும் விவசாயிகள் தானா வலையில் சிக்கியுள்ளார்கள் ??????? பாதையில் முழு நிர்வாணமாக சுற்றும் ஆடு மாடுகளைக் கொண்டு வந்து வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் .தைவிட நல்லாக இருக்கும்
ReplyDelete