ஐக்கிய அரபு நாடுகளில் சிறந்த வீதி பாதுகாப்பு உள்ளதாம்..!
ஐக்கிய அரபு நாடுகளில், சிறந்த சாலை பாதுகாப்பு உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின், சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மாநாட்டில், பங்கேற்பதற்காக, உலக சுகாதார அமைப்பு அதிகாரி, க்ரூக், அபுதாபிக்கு வந்தார். அப்போது, அவர் கூறியதாவது,
ஐக்கிய அரபு நாடுகளில், அழகான, நல்ல தரமான சாலைகள் அமைப்பதற்கு, பல நல்ல அம்சங்களை அமல்படுத்தியுள்ளனர். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்ட தடை, சீட் பெல்ட் அணிதல், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. மிகச் சிறந்த சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள முதல் ஐந்து நாடுகளில், ஐக்கிய அரபு நாடுகள் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு க்ருக் கூறினார்.
.jpg)
Post a Comment