Header Ads



குச்சவெளியில் அடையாளம் தெரியாத சடலம் - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

(ஏ.ஜே.எம்.சாலி)

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச  செயலாளர் பிரிவில் வாழைத்தோட்டம் என்னும் இடத்தில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று குச்சவெளி பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது . இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இச்சடலத்தை அடையாளம் காண்பதற்காக  குச்சவெளி பொலிசார் பொதுமக்களின் உதவிகளை கோரியுள்ளனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
தலையில் ஏற்படுததப்பட்ட  காயத்தினால்  முகம் சிதைவடைந்துள்ளது. அவரின்  நிலைக்கு ஏற்றவாறு பொலிசாரால் அவரின் முகத்தை ஒத்ததான  படம் ஒன்று வரையப்பட்டுள்ளது. 

இந்நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் குச்சவெளி பொலிசாருடனோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடனோ  தொடர்பினை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.