Header Ads



கொழும்பில் நடைபெற்ற அரைநிர்வாண போராட்டம் (பிரத்தியேக படங்கள் இணைப்பு)


(ஏ.எல்.ஜுனைதீன்)

வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2013.12.02 ஆம் திகதி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் நிர்வாண  ஆர்ப்பாட்டம்  ஒன்றை நடத்தியது.  

விவசாயிகள் தமது பாரம்பரிய ஆடையில் அரை நிர்வாணமாக இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 2014 வரவு செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி  மக்களை விழிப்பூட்டுதல் என்ற துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர்.

கமக்காரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயது 60 இலிருந்து 63 ஆக அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்!
கமக்காரர்களின் நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு!
என்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பையும் இங்கு வேண்டினர். 




No comments

Powered by Blogger.