சீரழிந்து சிதைந்துபோயுள்ள கிழக்குமாகாண ஆயுர்வேதத்துறை
(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)
நமது நாட்டைப்பொறுத்தவரை இன்று எல்லாமே கலப்படமாக இருக்கிறது,கலப்படமில்லாத துறை ஒன்று இருக்குமா என்றே எண்ணத்தோன்றுகின்றது.எமாற்றமுறும் மக்களை ஏமாற்றுபவர்கள் தினந்தினம் புதுப்புது வழிகளில் ஏமாற்றி தமது வித்தைகளால் அப்பாவிகளை வீழ்த்திக்கொண்டே இருக்கின்றனர்.
அந்தவகையில் மருத்துவத்துறையிலும் கலப்படமும் ஏமாற்றமும் நிறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக ஆயுள்வேதம் என்ற ஒருதுறை இன்று மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பெரும் முகமூடிக் கொள்ளைக்காரனாக இடம்பிடித்திருக்கின்றது.
கிழக்குமாகாணத்தைப் பொறுத்தவரை ஆயுர்வேதத்துறை வைத்தியம் கற்றவர்கள் அரச வைத்தியசாலைகளில் தொளில்புரிகின்றார்கள்.வைத்தியசாலைக்கு வருபவர்களிற்கு மருந்து இல்லை அரசாங்கம் மருந்து அனுப்புகின்றது இல்லை எனது கிளினிக்குக்கு வாருங்கள் மருந்து தருகின்றேன் என்று கூறுகின்றனர்.தமது பிரைவேட் கிளினிக்குகளிற்கு வரும் நோயாளர்களிற்கு குறைந்தது மூன்றாயிரம் ரூபாவிற்கு மேலேதான் மருந்து கொடுக்கின்றார்கள். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு தமது கிளினிக்கில் மட்டுமே வாங்கும்படி மருந்துகளும் எழுதிக்கொடுக்கின்றனர். வேறு கடைகளில் அந்த மருந்துகள் கிடைக்காது என்பது பெரிய உண்மை.
கடவுளுக்கு அடுத்ததாக மருத்துவர்களை மதிக்கின்ற எமது மக்கள் கடன் பட்டென்றாலும் அம்மருந்துகளை வாங்கிக் குடிக்கின்றனர் மாதக்கணக்கில் பாவித்தும் நிரந்தரப்பலன் ஏதும் காணவில்லை என அவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறான சிகிச்சைக்காக வட்டிக்குப்பணம் எடுத்த மக்களும் உண்டு.
இதுபோல தங்களிடம் வரும் நோயாளர்களுக்கு பிரைவேட்டில் ஆங்கில மருந்துகளையும்,நுண்னுயிர்கொல்லிகளையும் கண்மூடித்தனமாக இவர்கள் கொடுக்கின்றனர்,ஆயுர்வேத மருந்துகளும் ஆங்கில மருந்துகளும் ஒரேநேரத்தில் உபயோகிக்கப்படுவதனால் இரண்டுக்கும் இடையிலா இடைத்தாக்கம் நடைபெற வாய்ப்ப்பு (DRUG INTERACTION) உண்டு. இது உடல் உள்ளுறுப்புக்களுக்கு சிலநேரம் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிழக்குமாகாண அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகள் சிலவற்றில் வைத்தியர்கள் தாங்கள் நினைத்த நேரத்திற்கே வருகின்றனர். பின்னேரங்களில் எந்த வைத்தியர்களும் காணக்கூடியதாக இல்லை. இதனால் மக்கள் பின்னேரங்களில் வைத்தியசாலைகளிற்கு போய் பலன் பெற முடியாமல் உள்ளது.
சிலவைத்தியர்கள் தேவையற்ற குருதிப்பரிசோதனை செய்து வருமாறும் கேட்கின்றனர்.பொதுவாக மேற்கத்தேய மருத்துவ முறையில் அடிமுதல் நுனிவரை ஈடுபட்டு இனியில்லை என்ற அதிருப்தி முடிவுக்கு வந்தவர்களே ஆயுள்வேத வைத்தியத்தை நாடுவார்கள் இவர்களை அங்கும் இங்கும் அலைய வைப்பதும் ,அலுக்கவைப்பதும் நியாயமாகத்தெரியவில்லை.
மற்றும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு சரியான விளக்கங்களும் பத்திய முறைகளும் குறிப்படுவதில்லை என சிங்கள பிரதேசங்களில் ஆயுள்வேத சிகிச்சை பெற்றவர்கள் தமிழ் பேசும் பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலைகளில் ஒப்பிட்டுக் கூறுகின்றனர்.
கிழக்குமாகாண் சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சும் இந்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஒருநாளில் மூன்று மணித்தியாலங்கள் மட்டும் கடமை புரிந்துவிட்டு மாதம் முடிவில் முளுச்சம்பளம் பெறுகின்ற இவர்கள் பெறுகின்ற ஊதியத்திற்கு நிகரான செவையை மக்களுக்கு வளங்குவதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கள பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளிற்கு கிடைக்கின்ற தேவையான மருந்து தூள்,எண்ணெய் வகைகள் அனைத்தும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கிடைக்கப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள சில வைத்தியசாலைகள் ஆளணிப்பற்றாக்குறையால் கஸ்டபடுகின்றபோது எதுவித வேலையும் இன்றி ஆயுள்வேத வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் வெறுமனே இருந்துகொண்டு சம்பளம் பெறுவது சிறந்ததொரு வளமுகாமைத்துவ முறையென்று கூறமுடியாது.
எனவேதான் பொதுமக்களது வரிப்பணத்தை ஊதியமாகப்பெறும் அதிகாரிகளும், ஊழியர்களும் அரசியல் வாதிகளும் அதே பொது மக்களின் நலனுக்காக கொஞ்சமாவது உழைக்க முன்வரவேண்டும்.
குறிப்பிட்ட ஊர்களிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்குளுக்கள் அந்த நிறுவனத்தின் போக்கிற்கு தம்மை மாற்றிக்கொள்ளாமல்அந்நிறுவனஙகளை மக்காள் நலன் பேணும் நிறுவனங்களாக உயர்த்த முன்வர வேண்டும்,உள்ளூர் அதிகாரசபைகள்,பிரதேச செயலாளர்கள் ,அரசியல்வாதிகள்,தொண்டு அமைப்புக்கள்,நலன்விரும்பிகள் அனைவரும் இந்நிருவனன்களின்சீர்த்திருத்தத்திற்கு உழைக்க முன்வர வேண்டும்

Intha visayamm koodothalaka NINTHVOR hospital Latham nadanth.
ReplyDelete