அம்பாறையில் பலத்த மழை - கடல் கொந்தளிப்பு
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் பரவலாக கடும் காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்து வருவதுடன், கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பரவலாக காற்றுடன் கூடிய மழைபெய்து வருகின்றமையால் இப்பிரதேசங்களிலுள்ள தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றிரவு வீசிய பலத்த காற்றினால் கரையோர மீனவர் விடுதிகள் சில சேதமடைந்துள்ளது, வெள்ள அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை பிரதேசசெயலகங்களும், பிரதேச உள்ளுராட்சி சபைகளும் மேற்கொண்டுவருகின்றயும் குறிப்பிடத்தக்கது.;
.jpg)
Post a Comment