Header Ads



நிசாம் காரியப்பருக்கான சில யோசனைகள்...!

(ஏ.எல்.ஜுனைதீன்)

கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியம் வாழ்த்துக்கள்இ ஆலோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஒன்றியத்தின் சார்பாக சபையின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்இ செயலாளர் எம்.ஐ.அப்துல் ஜப்பார் ஆகியோர் ஒப்பமிட்டு இக்கடிதத்தை  அனுப்பியுள்ளனர்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

புதிய மேயருக்கு வாழ்த்துக்களும்                                2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைகளும்

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராகத் தாங்கள் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றிருப்பதையிட்டு எமது வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். உங்களது ஆட்சிக்காலப் பகுதியில் இப்பிரதேசம் பௌதீக,பொருளாதார ரீதியான அபிவிருத்திகளுக்கு மேலாக இன,மத,.பிரதேச பாகுபாடுகளற்ற சிறந்த வாழ்வொழுங்குகளைப் பேணும் சமூகமாக அபிவிருத்தியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சமீபத்தில் எமது சபை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் அளித்த சாட்சியத்தில் உள்ளுர் ஆட்சிமன்றங்களுக்கு அவ்வப்பிரதேசங்களில் இன,மத.பிரதேச பாகுபாடுகளற்ற சிறந்த வாழ்வொழுங்குகளைப் பேணும் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் நோக்குடன் செயற்பட சட்டம் ஒழுங்குகள் பேணும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்படும் இக்கால கட்டத்தில் பின்வரும்ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகின்றோம். நிதி பற்றாக்குறை காரணமாக இவை அனைத்தையும் அமுல் நடத்துதல் சாத்தியமற்றது என்றாலும் இக்கோரிக்கைகள் கொள்கையளவில் உங்களுக்கு ஏற்புடையதாகவிருப்பின் அதற்காக ஒரு அடையாள ஒதுக்கீடாவது ஒதுக்கினால் எதிர்காலத்தில அவற்றை அமுல் செய்வதற்கு உதவியாகவிருக்கும் என நம்புகின்றோம்.      
ஆலோசனைகள்

1.பொதுவழிகள்,வடிகான்கள்:                                                               
வடிகான்கள் தங்கு தடையின்றி வடிந்து செல்ல கிரமமாக சுத்தம் செய்;யப்படுவதை உறுதிப்படுத்தவும் பாதைகளில் குப்பை கூழங்கள் போடுவதைத் தடுக்கவும் பாதையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் 'வீதி கண்காண்pப்புக் குழுக்கள'; ஏற்படுத்தப்படவேண்டும். இக்குழுக்களுக்கு தேவையான வசதிகளும், அதிகாரங்களும் பொலிஸ் உதவியும் வழங்கப்பட வேண்டும.; 
                   
2.இறைச்சிவிற்பனை :                                                           இப்பிரதேசத்தில் கொல்களங்கள் நவீன முறையில் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். இறைச்சிக்கடைகளும் நவீன முறையில் அமைக்கப்பட்டு வாடகைக்கு கொடுபட வேண்டும். இறைச்சியை காட்சிப்படுத்தல், வாகனங்களில் ஏற்றிச் செல்லல் போன்ற விடயங்களில் சுகாதார விதிமுறைகளுக்கும் இறைச்சி உட்கொள்ளாத மாற்று இனத்தவரின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுபடுவதை உறுதிப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

3.முதியோர்நலன்புரிமையங்கள்                                                   
இலங்கையில் தற்போது 12மூ க்கு மேறபட்டோர் முதியோர்களாகும். இவ்வீதம் 2030ஆம் ஆண்டில் 20மூ ஆக அதிகரிக்கும வாய்ப்புண்டு.; தற்கால சமூக பொருளாதார நெருக்கடிகளினால் பிள்ளைகளோ குடும்பத்தினரோ இவர்களைக் கவனிக்கும் பொறுப்புகள் அருகி வருகின்றது. எனவே எதிhகாலத்தில் இப்பொறுப்புகள் உள்ளுராட்சி மன்றங்களையே சாரும்.           கல்முனை மாநகர சபை நடைமுறைப்படுத்திவரும் தாய் சேய் நலன் கிளினிக்குகள் மற்றும் ஆயுர்வேத வைத்திய சாலை போன்றவற்றை ஒத்த சேவைகளை இப்பிரதேசத்தில் அரச திணைக்களங்கள் செயற்படுத்தி வருவதினால் அவற்றிற்;கு ஒதுக்கும் நிதியை முதியோர் நலன்புரி மையங்கள் ஏற்படுத்த பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஊரிலும்; குறைந்த பட்சம் ஒரு முதியோர் நலன்புரி மையம் செயற்பட வேண்டும்.

4.சாய்ந்தமருதுதோணாஅபிவிருத்தி                                                
 சாய்ந்தமருதில் அமைந்துள்ள தோணா தற்போது சுற்றாடலுக்கும் சுகாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.; 2005 இல் துiஊயு நிறுவனம் தயாரித்த கல்முனை மீள் அபிவிருத்தித் திட்டத்திற்கமைய இத்தோணா அபிவிருத்தி செய்யப்படுமாயின் எதிர்காலத்தில் இப்பகுதி மக்களுக்கு சுற்றாடல், சுகாதாரம், பொருளாதாரம்,பொழுது போக்கு, உடற்பயிறச்சி ஆகிய வற்றில் பாரிய அனுகூலங்கள் கிடைக்கும். அதேவேளை மாநகர சபையின் வருமானத்தையும் இது உயர்த்தும்.
5.சோலைவரிவீதங்கள்                                                                சோலை வரி வீதங்கள் எல்லாக் கிராமங்களுக்கும் சமனாக இருத்தல் வேண்டும். அத்துடன் வரி அறிவித்தல்கள் வருடத்தின் ஆரம்பத்திலேயே குடியிருப்பாளர்களுக்கு சேர்ப்பித்தல் வேண்டும்.

மேற்படி ஆலோசனைகள் மற்றும் பிற விடயங்கள் தொடர்பாக எதிர் காலத்தில் தங்களுடன் கலந்துரையாடவும் உங்கள் செயற்பாடுகளுக்கு எங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கவும் ஆயத்தமாகவுள்ளோம்.

                     நன்றி, வஸ்ஸலாம்
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அல்ஹாஜ் எம்.ஐ.அப்துல் ஜப்பார்
தலைவர்           செயலாளர்                                    ;       


No comments

Powered by Blogger.