Header Ads



ஆண்களைப் போன்று வேடமிட்டு வீடுகளில் கூலி வேலை செய்த 2 பெண்கள் கைது

(Sfm) ஆண்களைப் போன்று வேடமிட்டு வீடுகளில் கூலி வேலைகளை செய்த இரண்டு பெண்களை காலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காலி - இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்கள் போலிப் பெயர்களில் செயற்பட்டு வந்ததாக அஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் ராணுவத்திலிருந்து தப்பிவந்தவர்கள் என்றும் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீதான மேலதிக விசாரணைகளின் பொருட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.