Header Ads



இலங்கைக்குள் சட்டவிரோதமாக வந்த எத்தனோல் - அரசாங்கத்திற்கு 112 மில்லியன் நட்டம்

(Adt) சட்டவிரோதமான முறையில் அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எத்தனோல் தொகையின் பெறுமதி 82 மில்லியன் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த 112 மில்லியன் வரி இல்லாது போயுள்ளதென சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். 

ஒருகொடவத்தை சுங்க களஞ்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தனோல் தொகை 7 கொள்கலன்களில் மீட்கப்பட்டது.  அதன் பெறுமதி இன்று கணிப்பிடப்பட்டதாக லெஸ்லி காமினி தெரிவித்தார். 

குறித்த 7 கொள்கலன்களிலும் 74,480 லீட்டர் எத்தனோல் காணப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.