Header Ads



ஈரானின் அணுசக்திக் தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்கள் ஏமாந்து விடமாட்டோம் - அமெரிக்கா

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

அணுசக்திக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஜெனீவாவில்  நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து ஈரானின் மீது நம்பிக்கை இல்லாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய ஜான் கெர்ரி, "ஈரானின் அணுசக்திக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்கள் கண்மூடித்தனமாக செயல்படவில்லை. அதே நேரத்தில் நாங்கள் ஏமாந்து விடவும் மாட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.