Header Ads



கல்முனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அவதானத்திற்கு..!

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள சில தேனீர் கடைகள் மற்றும் சாப்பாட்டுக் கடைகளில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்  இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பதாகவும், இதனாலேயே தேனீர் கடைகள் மற்றும் சாப்பாட்டுக் கடை உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவாறு சுகாதாரச் சீர்கேட்டுடன் கடைகளை நடாத்துவதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இவ்விடயத்தில் துரித அக்கறை காட்டி சுகாதாரச் சீர்கேடடைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கொரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.