Header Ads



ஹசன் அலியின் எச்சரிக்கை

(vi) இந்நாட்டு முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிப்பதற்காக இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கான வேலைத்திட்டங்களும் பொத்துவில் மண்ணிலேயே இடம்பெற்று வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.

பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழாவொன்றில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இக்கட்டடத்தை புனரமைத்த பொத்துவில் அறுகம்பை புனர் நிர்மாண அமைப்பின் பணியை பாராட்டுகின்றேன். அதேவேளை 2014 ஆம் ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து இப்பாடசாலைக்கு புதிய கட்டிடமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கை கொடுத்தது. அப்போது நாம் அரசுடன் சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டோம். ஆனால் அரசாங்கம் வாக்களித்தபடி எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எங்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது.

அதேவேளை பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரமித்து பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை சிறுபான்மையினர்களாக மாற்றுவதே அரசின் நோக்கமாகவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்தவே அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. இவற்றை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. எனவே பொத்துவில் பிரதேச முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எங்களது கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும். இல்லையேல் வடமாகாணத்துடன் இணைந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் எனவும் கூறினார்.

இந்நிகழ்வில் பொத்துவில் அறுகம்பை புனர் நிர்மாண அமைப்பின் செயலாளர் வைத்தியர் ஏ.எம்.இஸ்ஸதின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. If government is not fulfilling its promises,why you are giving time until next parliamentary election. that mean you want to enjoy all the benefits provided by the government for full period and end of the period you will contest the parliamentary election independently stating that the government failed to fulfil promises.

    good tactic to mislead the Muslims and steel their votes.

    After the election sell the total votes to ruling party for the some ministerial posts and other benefits.
    Again some new promises from new government. all the promises will not be fulfilled other than ministerial posts and personal benefits.

    will see how long you can cheat the Muslims.


    ReplyDelete

Powered by Blogger.