வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் (நளீமி) யின் கவனத்திற்கு..!
(பா.சிகான்)
மாநகர சபை எல்லைக்குட்பட்ட கால்வாய்கள் துர்வையற்று காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக யாழ் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பதிய சோனகத்தெரு.கல்லூரி வீதி ,ஜின்னா வீதி உள்ளிட்ட வீதிகளில் இருமருங்கிலும் உள்ள கால்வாய்கள் சதைவடைந்து காணப்படுவததுடன் நீர் ஓடுவதும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்படி பிரதெசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
இதுதவிர வீட்டுக் கழிவு நீர் ,ஹோட்டல் கழிவுகள் அடைந்த காணப்படுவதனால் மக்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இப்பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழை காரணமாக மென்மேலும் நீர் தேற்கி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள், யாழ் மாநகர சபை இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.



மத்திய் அரசாங்கத்திற்கு, மாகாண சபைகளுக்கு, உள்ளூராட்சி சபைகளுக்கு என்று வெவ்வேறான அதிகாரங்கள் அரசியல் யாப்பின் மூலம் வரையறுக்கப் பட்டுள்ளன.
ReplyDeleteவாய்க்கால்கள், கால்வாய்களை துப்பரவு செய்யும் பணி உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு உரியது. குறித்த பிரதேசம் யாழ் மாநகர சபைக்கு உட்பட்டது என்பதால், இதனை பிரதி மேயர் சட்டத்தானி ரமீஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதே பொருத்தமாக அமையும்.
சட்டத்தரணி ரமீஸ் அவர்கள் பியாதிமேயராக இருக்கும் சந்தர்ப்பத்தில், மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் இதில் தலையிடுவது, சட்டத்தரணி ரமீஸ் அவர்களுக்கும் தர்மசங்கடமான நிலையை உருவாக்கலாம்.