Header Ads



கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது விபத்து

(Adt) அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதல் விபத்து இன்று 03-11-2013  பதிவாகியுள்ளது. 

நீர் கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று இன்று பகல், நிலைதடுமாறி சாலையின் இருபுறமும் உள்ள கட்டுகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து இடம்பெற்ற போது காரினுள் சாரதி மற்றும் பெண்ணொருவரும் இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சீதுவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.