Header Ads



அக்கரைபற்று, கல்முனை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த, பெண் சாரணியர்க்கான செயல் அமர்வு (படங்கள்)

(யு.எம்.இஸ்ஹாக்)

இலங்கை சாரணர் சங்கத்தின் அக்கரைபற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த பெண் சாரணியக் குழுக்கழுக்கான  ஒரு நாள் பயிற்சி செயல் அமர்வு  இன்று 03.11.2013 காலை கல்முனை வை.எம்.சீ.ஏ மன்டபத்தில் நடை பெற்றது.

முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நடை பெற்ற இச்செயல் அமர்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் பிரதம அதிதியாகவும் மாவட்ட உதவி ஆணையாளர்கள் மற்றும் சாரயிணத்தின் முன்னோடிகள் பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தில் ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.ஜே.அஹாஸ்,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எஸ்.முகம்மட் சிராஜ் ஆகிய இருவரும் இச்செயலமரவில் நினைவு சின்னம் பொறிக்கப்பட்டு கௌரவப் படுத்தப்பட்டனர்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது.






No comments

Powered by Blogger.