இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் கடத்தல்
சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. பெருந்தொகைப் பணத்திற்காக இவ்வாறு சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பெங்களுரைவைச் சேர்ந்த காணிக்கைராஜ் என்பவர் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையின் தரகராக செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உடல் உறுப்புக்களை விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என தரகர்கள் நிபந்தனை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. gtn

Post a Comment