Header Ads



வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரி அதிபர் விபத்தில் படுகாயம்

(அபூ ஸஹலா)

வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரி அதிபர் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார். அவருடைய வீட்டுக்கு சமீபமாக வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று இவரை மோதியுள்ளது. அவருடைய இடது முழங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக வரக்காபொலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கும் அங்கிருந்து பேராதனை போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார். இக்கல்லூரியில் சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் முதலாம் தர அதிபரான இவர் ஆசிரியர் சேவையில் சுமார் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார். 

அடுத்த சில மாதங்களில் ஆசிரியர் செவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர் பாடசாலையில் நடைபெறவிருந்த அபிவிருத்தி சங்க கூட்டம் மற்றும் பெற்றோருக்கிடையிலான விசேட கூட்டத்தில் வருகை தரவிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.  வரக்காபொலை ஆதார வைத்தயிசாலையிலோ கேகாலை தள வைத்தியசாலையிலோ முறிவு சம்பந்தமான மருத்துவர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.