Header Ads



பாணந்துறை ஜீலான் வித்தியாலயத்தில் அறிவுச் சுரங்கம் இறுதிப் போட்டி - களுத்துறை முஸ்லீம் மகளிர் முதலிடம், தர்கா நகர் சாஹிராக் இரண்டாமிடம்


(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தினால் நடாத்தப்படும் அறிவுச் சுரங்கம் களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நிகழ்வு (12-11-13) பி.பகல். பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், புரவலர் ஹாசீம் உமர், பிகாஸ் நிறுவனத்தின் அனுசரனையாளர்கள், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத், பேராசிரியர் தில்லைநாதன், முஸ்லீம் பாடசாலைகள் பிரதிப் பணிப்பாளர் தாஜூத்தீன் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின் இறுதி அறிவுப் போட்டிகளை  ஜீலான் வித்தியாலய அதிபரும் அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்றி, நடாத்தினார். இர்சாத் ஏ காதர், அகமட் எம். ஜிப்றி ஆகியோறும் இந் நிகழ்வினை நாடத்தினர். மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

இறுதியாக 25ஆயிரம் ருபா முதற்பரிசினை களுத்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை தர்கா நகர் சாஹிராக் கல்லூரி பெற்றுக்  கொண்டது.




1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ். சில பெண்கள் தம் அந்நிய ஆடவர் முன்னிலையில் தம்மை முழுமையாக மறைத்து இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி நிற்கும் காட்சியைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. அல்லாஹ் அப்படியான பெண்களுக்கு ஈருலகிலும் உயர் பதவிகளையும், பாக்கியங்களையும் வழங்குவானாக. இப்படியான கால சூழலிலும் மன நிறைவோடு இஸ்லாத்pற்காக பெருமை சேர்க்கும் இப்பெண்களை உயர்ந்த சுவனபதியில் குடியிருத்துவானாக.

    ReplyDelete

Powered by Blogger.