Header Ads



கல்முனை மாநகர சபையில் குத்து வெட்டுக்கள்..!

(எம்.டப்ல்யு)

கல்முனை மாநகர சபையின் புதிய பதில் மேயராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதவியேற்றுள்ள நிலையில் மாநகர சபையில் அசாதாரன் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தனி நபர் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநகர சபையின் வரி இறுப்பாளர் என்பதைத் தவிர வேறு எந்தவிதமான அதிகாரமும் அற்ற தனிநபர் மாநகர சபையில் கடமையாற்றுகின்ற அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும், உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் கட்டளை பிறப்பித்துவருவதாகவும், தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறியவருகிறது. இதனால் மாநகர சபையானது மா நரக சபையாக, பொதுச் சந்தையில் நிலவும் அமைதியின்மை போன்ற சூழல் ஏட்பட்டுள்ளதாகவும், உரத்த குரலினால் அடக்கி ஆழ முயல்வதாகவும் இதனால் ஊழியர்கள் தத்தம் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளத்தாகவும் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு முன்னைய மேயர் சிராசுடன் நெருக்கமாக இருந்து கடமை செய்தவர்களை பழிவாங்கும் செயற்பாடும் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களுள் சிலரை கான் தோண்டுதல் பணிக்கு உடன் செயற்படும் வண்ணம் வேலைப்பிரிவுக்கு ​அவசர உள்ளக இடமாற்ற கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளனவாம். அத்தோடு அவர்களின் சுயவிபர கோவைகளும் தனி நபரினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாம். இதனால் மேற்படி தற்காலிக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் தொழில் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநகர ஆட்சியில் கட்சி ரீதியான ஆட்சி மாற்றம் இல்லாதபோதும் அதே கட்சியை சேர்ந்தவர்களுக்கு இக்கெதி ஏட்பட்டுள்ளது. இது எந்த ஆட்சியிலும் இடம் பெறாத ஒன்றாக காணப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் மேயர் சிராசினால் விட்டுச் சென்ற பணிகள் தற்போதைய மேயரினால் எவ்வாறு முன்னெடுக்கப்படுமென மக்கள் அங்கலாய்க்கின்றனர். போர் வெற்றியினால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி போன்ற ஒரு நிலையே கல்முனை மாநகர சபையில் காணப்படுவதாக பேசப்படுகிறது. இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் கட்சியின் தலைவருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் அறியவருகிறது.


No comments

Powered by Blogger.