கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி
(Nf) கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிவேகவீதியில் 12 ஆவது மைல் கல் பகுதியில் வைத்து இந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு பெறப்பட்ட இந்த முச்சக்கர வண்டி அதிகவேக வீதியில் பயணித்ததை அடுத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியும் அதன் சாரதியும் மேலதிக விசாரணைகளுக்காக பமுனுகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
Post a Comment