Header Ads



சிங்கத்தின் சீற்றம் - அதிர்ந்தது நீதிமன்றம்

எகிப்து முன்னாள் அதிபர் முர்ஸி ஒரு சிங்கத்தைப் போன்று நீதிமன்றத்தில் நடந்து கொண்டார் என அவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் புகழ்ந்துரைத்துள்ளார்.

எகிப்து அதிபராக இருந்த முஹம்மத் முர்ஸி கடந்த ஜூலை மாதம் ராணுவப் புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முர்ஸி மீது கொலைக்குற்றம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றம் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.

இன்று (04.11.2013) ரகசியமான இடத்திலிருந்து உலங்கு ஊர்தி மூலமாக முர்ஸி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். வழக்கினை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

முர்ஸி, "நீதிமன்றத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்ததோடு நீதிமன்றத்தில் ஒரு சிங்கத்தைப் போல கம்பீரமாக நடந்துக் கொண்டார்" என அவருடைய சார்பில் வாதாடிய வழக்குரைஞர் முஹம்மத் துஷான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  முர்ஸி மீதான வழக்குகளின் விபரங்களை அவருடைய வழக்குரைஞர்கள் 20 தினங்களுக்கு முன் கேட்டும்,  கடந்த சனிக்கிழமை அன்றுதான் வழங்கப்பட்டது. 

தன் மீதுள்ள குற்றச்சாட்டினை மறுத்து தானே வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் முர்ஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

3 மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக அவரது முகத்தை காண ஏராளமான ஆதரவாளர்கள் கோர்ட்டின் முன் குவிந்தனர்.

வழக்கமாக கைதிகளுக்கு அளிக்கப்படும் சீருடையை அணியாமல் 'சூட்' உடுத்தி வந்த அவர், 'நான் தான் முஹம்மது மோர்சி. எகிப்து குடியரசின் ஜனாதிபதி' என்று நீதிபதியை நோக்கி கம்பீரமாக கூறினார்.

எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பு என்பது தேசத் துரோக குற்றம். இந்த குற்றத்தை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டபூர்வ அதிபரான எனது ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களை காப்பாற்ற நீதிமன்றம் முயற்சிக்க கூடாது என்று கூறிய மோர்சியை நோக்கிய நீதிபதி 'கைதிகளுக்கான சீருடையை அணியாமல் கோர்ட் விசாரணையில் பங்கேற்க கூடாது' என்று அறிவுறுத்தினார்.

ஆனால், 'அதிபராக இருக்கும் என்னால் கைதிகளுக்கான சீருடையை அணிய முடியாது' என்று மோர்சி மறுத்து விட்டார்.

2 comments:

  1. allahu akbar unmai nilaikkum poi entro orunaal aliyum

    ReplyDelete
  2. மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார்

    அல்லாஹ் இவருக்கும் இவரை சார்ந்தவருக்கும் நல்லுணர்வை வழங்கி அவர்களின் வழியை சீர் செய்துகொல்ல வேண்டும் இன்ஷால்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.