முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான அமெரிக்க வைத்தியர்களின் மிருகத்தனம்..!
பயங்கரவாத வழக்கில், கைது செய்யப்பட்ட கைதிகளை, அமெரிக்க ராணுவ டாக்டர்களும், நர்சுகளும் கொடுமை படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள வர்த்தக கோபுரம் தகர்க்கப்பட்ட வழக்கில், ஏராளமான அல்-குவைதாகள் கைது செய்யப்பட்டனர். கியூபா அருகே உள்ள குவான்டனாமோ தீவில் உள்ள சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். அல்-குவைதாகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும், இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈராக்கில், 'அபு கிரைப்' சிறையில், கைதிகள் பலரை, பிரிட்டன் ராணுவத்தினர் கொடுமைப்படுத்திய படங்கள் வெளியானதால், 'குவான்டனாமோ சிறையில் உள்ளவர்களை கொடுமைப்படுத்தககூடாது'என, மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன.
இதன் காரணமாக, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,ராணுவ டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மூலமாக, இந்த கைதிகளை கொடுமைப்படுத்தியதாக தற்போது தகவலகள் வெளியாகியுள்ளன. உண்ணாவிரத போராட்டம் நடத்தும் கைதிகளுக்கு, நர்சுகள் கட்டாயப்படுத்தி உணவளித்துள்ளனர். கைதிகள் மீது நீண்ட நேரம் தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு, சிகிச்சை அளிக்காமல் விட்டுள்ளனர். பல கைதிகளை தூங்க விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக கைதிகளின் வக்கீல்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 19 பேர் கொண்ட குழு, இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. இந்த சம்பவங்களை விசாரித்த ஆய்வு குழு, தனது ஆய்வறிக்கையை, அமெரிக்க ராணுவ அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது. மேற்கண்ட கொடுமைகள் நடந்துள்ளதை, இந்த குழு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அமெரிக்க ராணுவத்துறை தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment