அரபு உலகில், எகிப்து பெண்களுக்கு மோசமான நாடு
(Tn) அரபு உலகில் பெண்களுக்கு மோசமான நாடாக எகிப்து முன்னிலை பெற்றிருப்பதாக பால் நிலை சமத்துவம் தொடர்பான நிபுணர்களின் கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தொந்தரவு மற்றும் பாலுறுப்பு சிதைவு போன்ற வன்முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 21 நாடுகளைக் கொண்ட அரபு உலகில் கொமொரொஸ் தீவுகள் பெண்களுக்கு எதிரா வன்முறை குறைத்த நாடாக பதியப்பட்டுள்ளது.
330 பாலின சமத்துவ நிபுணர்களைக் கொண்டு சிரியா உட்பட 21 அரபு லீக் நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2011 அரபு எழுச்சிக்கு பின்னரான பெண்களின் உரிமை குறித்து அவதானிக்கும் ஆய்வாக இது கருதப்படுகிறது.
எகிப்துக்கு அடுத்ததாக ஈராக் பெண்களுக்கு மோசமான இடமாக கணிக்கப்பட்டுள்ளதோடு அதற்கு அடுத்த இடங்களில் சவுதி அரேபியா, சிரியா மற்றும் யெமன் நாடுகள் காணப்படுகின்றன. எனினும் கொமொரொஸ் அமைச்சர வையில் 20 வீதமான பெண கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். இதற்கு அடுத்ததாக ஓமான், குவைட், ஜோர்தான் மற்றும் கட்டார் நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
ஐ.நா. சபை கடந்த ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் எகிப்தில் 99.3 வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று சத்தாம் ஹுஸைனின் ஆட்சியை விடவும் ஈராக்கில் பெண்கள் அபாயத்திற்கு முகம் கொடுப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment