அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நீர்ப்பாசன வாரம்
(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களமும், மாகாண நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து நடாத்தும் நீர்ப்பாசன வாரம் தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு 02-11-2013 அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், கோணாவத்தை அபிவிருத்தி தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன வார அபிவிருத்திகளையும் அமைச்சருடன் ஊடகவியலாளர்களும் சென்று நேரடியாக பார்iவியிட்டனர்.
இப்பத்திரிகை மாநாட்டுக்கு சுற்றாடல் அதிகார சபையின் பிரதி மாகாணப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அக்கரைப்பற்று நீர்ப்பாசன பணிப்பாளர் எம்.ஐ.எம்.இப்றாஹீம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா முகைதீன் உட்பட அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களும், மத்திய, மாகாண நீர்ப்பாசன திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment